மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்?

Photo of author

By Parthipan K

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்?

தற்போதைய காலங்களில் மக்கள் அனைவரும் பலவிதமான ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சில ஆப்களில் லோன் தருவதாகவும் மற்றும் ஆன்லைன் கேம்ஸ் டவுன்லோடு செய்து விளையாட்டில் வெற்றி பெற்றால் பணம் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவைகளையெல்லாம் நம்பி மக்கள் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வார்கள்.

அதில் மிக முக்கியமாக லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க அப்டி பண்ண சொல்லும்போது ஒரு போட்டோவை கேப்பாங்க இதே மாதிரி உங்களுடைய கான்டெக்ட் லிஸ்ட் ல இருக்குற நாலஞ்சு பேரு இமெயில் ஐடி கேப்பாங்க . நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள் உங்களுடைய இமெயில் ஐடி வாங்கிட்டு இப்போது நீங்கள் லோன் அப்லே செய்யவும் சொல்லுவார்கள்.

முதலில் 3000, 5000 என லோனில் பணத்தை உங்களுக்கு கொடுப்பார்கள். பிறகு நீங்கள் குடுத்த போட்டோவை ஆபாசமாக சித்தரித்து 20 ஆயிரம் ஐம்பதாயிரம் பணம் கொடுக்காவிட்டால் இந்த போட்டோவை உங்கள் கான்டெக்டில் உள்ள நபர்களுக்கு எல்லாம் பகிர போறேன் என்று உங்களை மிரட்டுவார்கள். நீங்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் பணத்தை கொடுப்பீர்கள்.

மேலும் அந்த போட்டோவை ஆன்லைனில் வெளியிடப் போகிறேன் என்று 5 லட்சம் 10 லட்சம் பணம் கொடுத்தால் நான் ஆன்லைனில் உங்கள் போட்டோவை போட மாட்டேன் என்று பயமுறுத்துவார்கள். இதற்கு பயந்து பல நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். எனவே மக்களின் நலன் கருதி சில மோசடி ஆப்களை முடக்க காவல்துறை முயற்சி செய்து வருகின்றனர்.

இதில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துகொண்டு வருகின்றன. அதையும் மீறி சில ஆப்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

எனவே மக்களாகிய நீங்கள் எதையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம் என்று அவர் கூறினார். மேலும் சில மோசடியில் ஈடுபட்டுள்ள ஆப்களின் பெயர்களை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டார் டி.ஜி.பி, சைலேந்திர பாபு euvalt,masen rupee,lory loan , wingo loan,cici loan, city loan இந்த ஆப்கள் எல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ள ஆப்கள்.

இந்த ஆப்களை எல்லாம் நீங்கள் டவுன்லோட் பண்ண வேண்டாம். அப்படி ஏதாவது பண்ணி இருந்தா உடனே இவைகளை எல்லாம் டெலிட் பண்ணிடுங்க.மேலும் இது சமந்தமாக உங்கள் தொலைபேசியில் குறுஞ்செய்தி மற்றும் ஏதேனும் சந்தேகமான செய்தி வந்தால் உடனே காவல் துறையினருக்கு தெரிவிக்குமாறு கூறினார். தமிழக மக்களின் முக்கியமான வேண்டுகோள் எனவும் கூறியிருந்தார்.