இரு தரப்பினருக்கிடையே வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி!
அ.தி.மு.க. வில் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி என இரு தரப்பும் விட்டுக் கொடுத்து முன்வராததால், ஒற்றைத் தலைமைப் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கட்சி பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில்அவரது தரப்பினர் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த நிலையில், இதையும் விட்டுக் கொடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பினர் விடாப்பிடியாக உள்ளனர்.வியாழக்கிழமை நடக்க இருக்கும் குழுவில் செயற்குழு கூட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காத்து இருக்கிறார்
.அதில்உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், வளர்மதி, பொன்னையன், செம்மலை, விஸ்வநாதன், வைகைச்செல்வன், உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
பொதுச்செயலாளர் பதவியை எடுத்து வரும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற அவரின் குழு தயாராக இருக்கிறது. கூட்டம் எல்லாம் நீங்க நடத்தலாம். ஆனால் பொதுச்செயலாளர் தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்க கூடாது என்பதில் ஓபிஎஸ் தெளிவாக இருக்கிறார்.
ஓபிஎஸ்க்கு இன்றைய சூழ்நிலையில் மாவட்ட செயலர்கள் ஆதரவு அவ்வளவு இல்லை. பெரும்பாலானோர் எடப்பாடி பக்கமே இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் 2300 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் உள்ளார்கள்.
60 சதவிகிதம் வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான கணக்கெடுப்புகளை ஓபிஎஸ் எடுத்து கொண்டு இருக்கிறாராம். ஒருவேளை பொதுச்செயலாளர் தொடர்பாக தனி தீர்மானம் வந்தால் பொதுக்குழுவை பாதியில் நிறுத்த வேண்டும் என ஓபிஎஸ் உத்தரவிடுவார்.
நமக்கு சாதகமாக எவ்வளவு வாக்குகள் வரும் என்று ஓபிஎஸ் தீவிரமாக கணக்கெடுத்து வருகிறாராம். இந்த நிலையில்தான் ஆளும் தரப்பின் உதவியை நாட அவர் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தீர்மானகுழுவில் சண்டை போட்டு காயம் ஏற்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும்.
எனவே மக்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் பொதுக்குழுவை பாதியில் நிறுத்த ஓபிஎஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை காரணம் காட்டி கூட்ட நிர்வாகிகளை அனைவரையும் வெளியேற்ற முடியும்.
இதன் மூலம் பொதுக்குழு கூட்டத்தில் எந்த ஒரு முடியும் எடுக்க முடியாமல் காலம் தாழ்த்த வாய்ப்பு உள்ளதாக ஒபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.ஆளும் தரப்பில் நெருக்கமாக இருக்கும் தலைகளுடன் ஓபிஎஸ் தரப்பு போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஆளும் தரப்பை வைத்து இந்த கூட்டத்திற்கே ஆப்பு வைக்க நினைக்கிறாராம்.
அதிமுக கூட்டத்தில் பெரிய மோதல்கள் வரலாம் என்று ஓபிஸ் ஆதரவாளர்கள் சிலர் போனில் பேசியதாக சொல்லப்படிகிறது ..ஓபிஎஸ் தரப்பிற்கு ஆளும் தரப்பு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.இதில் தலையிட எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை என கூறினார்கள்.
இது உங்களுடைய விஷயம் நாங்கள் தலையிட பாஜகவா? ஜெயலலிதா இறந்த போது அப்போதே நாங்கள் இந்த ஆட்சிக்கு வந்திருக்க முடியும்.அன்றே அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை.
கிட்டத்தட்ட 90 எம்எல்ஏக்கள் இருந்தும் நாங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் தேர்தலுக்காக காத்து கொண்டிருந்தோம். இந்நிலையில் நாங்கள் உங்கள் விவகாரத்தில் எதற்கு தலையிட போகிறோம் எங்களுக்கு அது வீணான நேரம் என்றார்கள்.
அப்படி நாங்கள் செயல்பட்டால் திமுக கட்சியினர் தான் இதற்கு காரணம் என்று போலிஸ் செயல்படுவார்கள். அதனால் இந்த பிரச்சனைக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.இதுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு விதமான கருத்து வேறுபாடும் இல்லை. என்று திமுகவினர் பொதுக்குழு குறித்து கூறியுள்ளனர்.