பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய படையில் 545 டிரைவர் காலிபணியிடங்கள்!!

Photo of author

By Rupa

 

இந்தோனேசியா-திபெத் எல்லை போலீஸ் படையில் மொத்தம் 545 ‘கான்ஸ்டபிள்’ காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நவம்பர் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.

இந்தோனேசியா- திபெத் எல்லை போலீஸ் படையில் (I.T.P.P) ‘கான்ஸ்டபிள்’ (டிரைவர்) பிரிவில் 545 இடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்காக வயது வரம்பு 21 வயது முதல் 27  வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும்.

இதற்காக விண்ணபக்கட்டணம் ரூ.100. மற்றும் S.C., S.T., பிரிவினருக்கு கட்டணம் எதும் கிடையது என்று கூறப்பட்டுயுள்ளது.

https://recruitment.itbpolice.nic.in/  என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.