உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

Photo of author

By Kowsalya

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

இந்தோனேஷியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதிச் சடங்கின்போது குளிப்பாட்டும் போது உயிர் வந்து மறுபடியும் ஒரு மணி நேரத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என பெயர் கொண்ட சிறுமிக்கு12 வயது நிரம்பியுள்ள நிலையில் பல உடல் கோளாறுகளால் மருத்துவமனையில் 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அன்று மாலை மருத்துவர்களால் சிட்டி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி சடங்கிற்காக வீட்டிற்கு சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர்கள்.

இறுதிச் சடங்கில் குளிப்பாட்டி கொண்டிருக்கும் பொழுது திடீரென சிறுமி கண் விழித்தார் மற்றும் இதயம் துடிக்க ஆரம்பித்து விட்டது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க சேர்த்துள்ளனர்.

மறுபடியும் ஒரு மணி நேரம் கழித்து சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கேட்ட பொழுது “இது ஹைபர்கோமியவால் நிகழ்ந்துள்ளது. ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இதுபோன்று நிகழ்வுகள் நிகழும்” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.