இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரம்!!

erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன்  சுற்றுலா சென்றபோது   விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது  சிறுமி.

ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள்  சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது  மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு    ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில்  உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள்  இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் RN புதூர் பகுதியை சேர்ந்த சுனில்  என்ற இளைஞருடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு  சிறுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்  சம்பவத்தன்று அந்த சிறுமியின் பெற்றோர்கள்  உறவினர் இறப்பு  துக்க நிகழ்வில் கலந்து கொள்ள  வெளியூர் சென்று  இருக்கிறார்கள். அன்று அந்த சிறுமி எப்பொழுதும் துணிக்கடைக்கு  வேலைக்கு செல்வது  போல ஈரோடு  வந்து இருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி அந்த சிறுமி இன்ஸ்டா நண்பன் சுனில் உடன் பர்கூர் மலைக்கு  பைக்கில் சுற்றுலா சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சாலையில் படுகாயமடைந்து  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய   சிறுமியை  அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  இருக்கிறார்கள். படுகாயம் அடைந்த அந்த சிறுமியின் உடல் நிலை மேலும் மோசம் மாறியுள்ளது. இதை அறிந்த மருத்துவர்கள். அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அங்கு அந்த சிறுமியை  மருத்துவர்கள் பரிசோதனை செய்து உள்ளார்கள் .

முடிவில் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து உள்ளார் என்பதை  உறுதி படுத்தி
இருக்கிறார்கள் மருத்துவர்கள்.இந்த தகவலை அறிந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அச் சுனில் உடன் பைக்கில் செல்லும் போது சாலையில் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது  மகள்  இறந்த செய்தியை அறிந்து வந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்களது மக்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

தங்களது மகளை பைக்கில் அழைத்து  சென்ற இளைஞன்  சுனிலுக்கு  கையில் மட்டும் கட்டு போடப்பட்டுள்ளது, மேலும் அது பொய்யான கட்டு என்றும் கூறியுள்ளார். காவல்துறையினர்  சிறுமியின் இறப்பு செய்தியை அவர்களது மகள்  தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள் , தற்போது மகளின் தொலைபேசி அவர்களிடம் இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

மேலும் தங்களது மகளின் இறப்புக்கு  காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து  இருக்கிறார்கள். இது முற்றிலும் பெற்றோர்களின் பிள்ளைகள் மீது உள்ள கவனக்குறைவு தான் காரணமாக இருக்கிறது. இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.