Andhra: பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் செய்து தான் வருகிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் விகிதம் அதிகரித்து வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது.
பறவை காய்ச்சல் நேரடியாக கோழிகள் மற்றும் அதன் முட்டைகளிலிருந்து பரவுகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அதாவது நாம் வாங்கி செல்லும் கோழிக்கறியை சமைக்காமல் நேரடியாக சாப்பிடும் பட்சத்தில் பறவை காய்ச்சல் வைரஸானது நம்மை தாக்கக்கூடும். அதுவே 70 வது டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைக்கும் போது பறவைக்காய்ச்சல் வைரஸானது அழிந்துவிடும். மேற்கொண்டு அதிலிருந்து எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது.
ஆனால் அந்த இரண்டு வயது குழந்தையின் பெற்றோர் கோழி கறி வாங்கி வந்ததும், பச்சை கரியாகவே ஒரு துண்டு கொடுத்துள்ளனர் இதன் மூலம் குழந்தைக்கு காய்ச்சல் பேதி உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குணமாகாத நிலையில் மேற்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பச்சைக் கரியை அப்படியே சமைக்காமல் அந்த குழந்தையிடம் கொடுத்தது தான் முக்கிய காரணம். அதுவே சமைத்து சாப்பிட்ட அந்த குடும்பத்தாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதனால் பொதுமக்கள் யாரும் கறியை சமைக்காமலோ அல்லது அரைவேக்காட்டிலோ சாப்பிட வேண்டாம். அதேபோல அதன் முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிடலாம் அதற்கு மாறாக ஆம்லெட், ஆப் பாயில், கலக்கி போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த தொற்றால் பாதிப்பை சந்திக்க கூடும்.