ஸ்கை டைவிங் செய்தபோது விபரீதம்: திருமண நாளில் பலியான சோகம்

0
186

பிரிட்டனில் 55 நபர் ஒருவர் தனது திருமண நாளில் மனைவியை மகிழ்விக்க பாராசூட்டில் இருந்து குதித்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார்.

பிரிட்டனை சேர்ந்த 55 வயது நபர் கிறிஸ்டோபர் ஸ்வால்ஸ். இவர் தனது 30வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாட அங்கிருந்த சுற்றுலா தலம் ஒன்றுக்கு சென்றார். மனைவியை மகிழ்விக்க எண்ணி பாராசூட்டில் இருந்து உயரமான இடத்தில் இருந்து குதித்தார். ஆனால் திடீரென பாராசூட் ஓட்டையாகியதால் அவர் கீழே விழுந்தார்.

முதலில் அவருக்கு கால் எலும்பு முறிந்து மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். திருமண நாளில் கிறிஸ்டோபர் மரணம் அடைந்தது அவரது மனைவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleமலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!
Next articleஅரசு ஊழியர்களுக்கும் இனி அடையாள அட்டை: தமிழக அரசு உத்தரவு