2 அடி 5.5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை!

Photo of author

By Kowsalya

பிரிட்டனில் ஒரு இளம் பெண் இரண்டு அடி  5.5 கிலோ உள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜாக் ஏமி என்ற தம்பதியினர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பக்கிங்கம்ஷைர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
ஏமிக்கு வயது 27. இவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அவர் இரண்டு அடி உயரமும் 5.5 கிலோ எடையுள்ள குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை சராசரி குழந்தைகளின் எடையை விட இரண்டு மடங்கு பெரியதாகும். அறுவை சிகிச்சையின் பொழுது ஒரு டாக்டரால் தூக்கமுடியாமல் இரு டாக்டர்கள் தூக்கி எடை இயந்திரத்தின் மேல் வைத்தனர் என்று கூறப்படுகிறது. அவ்வளவு பெரியதாக இருந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜாக்ரீஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதைப்பற்றி ஏமி கூறியதாவது, குழந்தை உயரமாக பிறக்கும் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும். ஸ்கேன் செய்த பிறகு குழந்தை பெரியதாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவ்வளவு உயரமாக பிறக்கும் என்பதை நான் அறியவில்லை. என்று அவர் கூறினார்.

இதேபோல் மத்திய பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த குழந்தை 5.1 எடை இருந்துள்ளது. சாதாரணமாக குழந்தைகள் 2.5- 3.7 கிலோ அளவுதான் இருக்கும்.