வங்கி கணக்கில் பேலன்ஸ் கண்டிப்பாக வேண்டும்! இல்லையெனில் அபராதம் தான்!
பொதுத்துறை மற்றும் தனியார் என அனைத்து விதமான வங்கிகளின் வாடிக்கையார்கள் தங்களது வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதந்திர இருப்பு தொகையாக பராமரிக்க வேண்டும்.ஆனாலும் ஒவ்வொரு வங்கிக்கும் ஏஎம்பி வேறுபடுகின்றது. மேலும் நகர்புறம், மெட்ரோ, அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கணக்கு உள்ள இடத்தையும் ஏஎம்பி சார்ந்து இருகின்றது.
ஏஎம்பி தேவைகளை பூர்த்தி செய்ய தவறினால் வங்கியால் கட்டணம் வசூல் செய்யப்படும் என வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஐசிஐசிஐ வங்கி வழக்கமான சேமிப்புக்கணக்கிற்கு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச மாதம் சராசரி இருப்புத்தொகையாக ரூ 10,000 மெட்ரோ அல்லது நகர்ப்புற பகுதிகளுக்கும்,ரூ 5,000 அரை நகர்ப்புற இடங்களுக்கும், ரூ 2,000 கிராமப்புற இடங்களுக்கும் பராமரிக்க வேண்டும்.
சராசரி இருப்புத் தொகையை பராமரிக்க தவறியவர்கள் வங்கி பற்றக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ 500 குறைவாக இருப்பினும் அபராதம் விதிக்கப்படும். எஸ்பிஐ வங்கி 2020 முதல் எஸ்பிஐ தன் அடிப்படையில் சேமிப்பு கணக்குகளுக்கான ஏஎம்பி தேவையை தள்ளுபடி செய்தது. முன்னதாக எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய கணக்கு வைத்திருக்கும் இருப்பிடத்தை பொறுத்து மாதம் சராசரியாக ரூ 3000 ,ரூ 2000 மற்றும் ரூ 1000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும்.
ஏஎம்பி பராமரிக்கத் தவறினால் அவர்களுக்கு ரூ 5 முதல் 15 வரை அபராதம் விதிக்கப்படும்.மேலும் கூடுதலாக தங்கள் சேமிப்பு கணக்கில் அதிகளவு பணம் வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் பலன்கள் வழங்கப்படுகின்றது.