டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு!!! ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

0
109

டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு!!! ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

டிபன் பாக்ஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் கற்குவியலுக்கு நடுவே ஒரு டிபன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அந்த டிபன் பாக்ஸை பார்த்த சிலருக்கு அதில் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் டிபன் பாக்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது என்று வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டிபன் பாக்ஸ் இருக்கும் பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலைக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர்.

பின்னர் சோதனைக் கருவிகளை வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் டிபன் பாக்ஸை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அந்த டிபன் பாக்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இராணுவ முகாம் அருகில் டிபன் பாக்சில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  உடனடியாக டிபன் பாக்சில் இருந்த வெடிகுண்டு கண்டறயிப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் டிபன் பாக்சில் மறைத்து வக்கப்பட்டிருந்த வெடிகுண்டை பறிமுதல் செய்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆளில்லாத இடத்திற்கு கொண்டு சென்று வெடிகுண்டை வெடிக்க வைத்தனர்.

Previous articleNLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!
Next articleவங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!! இனி நான்கு நாட்களுக்கு மழைதான்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!