நன்றாக நடந்து கொண்டிருந்த குத்துச்சண்டை போட்டி! திடீரென்று விலகிய வீராங்கனை! காரணம் என்ன தெரியுமா? 

Photo of author

By Rupa

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் குத்துச்சண்டை போட்டியில் நன்றாக நடந்து கொண்டிருந்த குத்துச்சண்டை போட்டியில் இத்தாலி நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை திடீரென்று விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் தொடங்கி  சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என அனைவரும் பதக்கங்களை வெல்ல கடும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று ஒலிம்பிக் தொடரில் பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது.
அதாவது ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 66 கிலோ எடை பிரிவில் குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இத்தாலியை சேர்ந்த வீராங்கனை ஏஞ்சலா கரிணி அவர்களும், அல்ஜீரியாவை சேர்ந்த வீராங்கனை இமான் கலீப் அவர்களும் மோதினர்.
இருவரும் பரபரப்பாக மோதிக் கொண்ட இந்த போட்டி சுமார் 46 நொடிகள் நடைபெற்றது. இதையடுத்து இத்தாலியை சேர்ந்த வீராங்கனை ஏஞ்சலா கரிணி அவர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறினார். மேலும் வீராங்கனை ஏஞ்சலா கரிணி அவர்கள் போட்டியை பாதியில் நிறுத்தி விட்டு வெளியே வந்து கதறி அழுதார்.
இது குறித்து இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரிணி அவர்கள் புகார் அளித்துள்ளார். அதாவது அந்த புகாரில் “என்னை எதிர்த்து விளையாடிய இமான் கலீப் அவர்கள் ஒரு பெண்ணே இல்லை. அவர் ஒரு ஆண். அவர் விட்ட ஒவ்வொரு குத்தும் ஆண் போலவே இருக்கின்றது. பெண்களுக்கான போட்டியில் ஆண்களை விளையாட வைத்து வெற்றி பெறுவது என்பது ஏற்க முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார்.
அல்ஜீரியா நாட்டை சேர்ந்த வீராங்கனை இமான் கலீப் அவர்கள் ஏற்கனவே ஒரு முறை 2023ம் ஆண்டு இது போன்ற சந்தேகத்தினால் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீராங்கனை இமான் கலீப் பெண்ணே இல்லை என்று இத்தாலிய வீராங்கனை கூறியிருப்பது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
இத்தாலிய வீராங்கனை அளித்த புகாரை அடுத்து ஒலிம்பிக் சம்மேளனத்தின் செய்தி தொடர்பாளர் அவர்கள் “ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் அனைத்து பெண்களும் விளையாடத் தேவையான தகுதிகளை பெற்றுள்ளார். இந்த விஷயத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. மேலும் இமான் கலீப் அவர்களின் பாஸ்போர்ட்டில் இமான் கலீப் ஒரு பெண் என்பதை விளக்கிக் கொள்ள வேண்டும்.
இமான் கலீப் அவர்கள் பெண் என்பதால் தான் அவர் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். எனவே வீராங்கனை இமான் கலீப் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.