என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

Photo of author

By Kowsalya

ஆந்திரா மாநிலத்தில் சிறுமி ஒருவரை தொண்டையில் அறுத்து கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுனில் என்ற நபர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி என்ற பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது.

17 வயது சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சிறுமியை அவர் ஒரு ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார் என சொல்லபடுகிறது. அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார் என சொல்லபடுகிறது.

அதனால் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுனில் ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியால் அந்த சிறுமியின் தொண்டையை கரகரவென அறுத்துள்ளார்.

அந்த இடத்திலேயே சிறுமி ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பிறகே கொல்லப்பட்ட 17 வயது சிறுமி வரலட்சுமி என அடையாளம் கண்டுள்ளனர்.

போலீசார் சுனிலை கைது செய்து தற்போது போலீஸ் காவலில் சுனில் உள்ளார் என சொல்லபடுகிறது.