முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பயனுள்ள குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை முயற்சித்தால் முடி அடர்த்தியாக வளரும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – ஒரு கொத்து
2)நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் இந்த கறிவேப்பிலை நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.நீரின் நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த கறிவேப்பிலை நீரை கிளாஸிற்கு வடிகட்டி கால் தேக்கரண்டி நெய் சேர்த்து பருகினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.கறிவேப்பிலையில் இருக்கின்ற பீட்டா கரோட்டின்,வைட்டமின்கள்,தாதுக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை
2)கருஞ்சீரகம்
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை வேறொரு தட்டிற்கு கொட்டி வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றை நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பானத்தை வடிகட்டி குடித்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.இதை ஹேர்பேக் போன்று பயன்படுத்தி வந்தால் முடி கருமையாக வளரும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – ஒரு கொத்து
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்த கறிவேப்பிலையை அதில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கறிவேப்பிலை பானத்தை கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து பருகினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.