கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

0
159
#image_title

கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்து – 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த salcomp என்ற தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பணிக்கு சென்ற 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்திலிருந்து salconp என்ற தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.

சரியாக வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த, கோழிகளை ஏற்றி செல்லும் லோடு ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பணிக்கு சென்ற 9 ஆண்கள் 3 பெண்கள் என 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தொடர்ந்து காயமடைந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleலிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!
Next articleஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது!