பாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பு! பெரிய வாய்ப்பை தட்டி விட்டு நோ சொன்ன காந்தாரா பட நாயகன்!

Photo of author

By Rupa

பாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பு! பெரிய வாய்ப்பை தட்டி விட்டு நோ சொன்ன காந்தாரா பட நாயகன்!

ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் காந்தாரா திரைப்படம் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தற்சமயத்தில் வந்த படங்களை காட்டிலும் இப்படம் அதிக வசூலை எட்டியுள்ளது. உடுப்பியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து இப்படம் உள்ளது. மேலும் அவர்கள் தெய்வ நம்பிக்கை குறித்து பெருதளவில் இப்படத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த மக்களுக்கு அரங்கேறும் அநீதியை குறித்தும் தெரிவித்துள்ளனர். இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் செட்டியை கூப்பிட்டு பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்தை தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இப்படத்தை குறித்து மத்திய தொழில்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, வெறும் 17 கோடி செலவில் தயாரான இப்படம் தற்போது வரை 300 கோடி அளவில் வசூல் சாதனை அடைந்துள்ளது. இதனை முதலீட்டாளர்கள் அனைவரும் ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து காந்தார பட நடிகர் மற்றும் இயக்குனரான செய்திகளை சந்தித்து பேசினார்.அதில், காந்தாரா படம் வெற்றியை தொடர்ந்து எனக்கு பல வாழ்த்துக்கள் குவிந்தது.

அதிலும் குறிப்பாக பாலிவுட் இயக்குனர்களிடமிருந்து எனக்கு பட வாய்ப்புக்கள் குறித்து அழைப்புகள் வந்தது. ஆனால் தற்பொழுது நான் கன்னட படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். பாலிவுட் படம் ஏதும் பிடிக்காமல் இவ்வாறு நான் பதில் அளிக்கவில்லை. பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் சாஹித் கபூர் சல்மான் பாய் என அனைவரையும் நான் ரசிப்பேன். இருப்பினும் தற்பொழுது கன்னட திரைப்படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.