நரேன் தனது 22வது வயதில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படமான துருவங்கள் பதினாறு மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
நரேனின் இரண்டாம் ஆண்டு திட்டமான நரகாசூரன் ஒரு குழும நடிகர்களைக் கொண்டுள்ளது. அரவிந்த் சுவாமி , ஷ்ரியா சரண் , சுந்தீப் கிஷன் , இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 41 நாட்களில் நிறைவடைந்துள்ளது. ஆனால் தற்பொழுது வரை இந்த திரைப்படமானது திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நரகாசுரன் திரைப்படத்தினை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கியுள்ளார். இவருக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் தற்போது வரையில் இந்த திரைப்படம் திரையிடப்படவில்லை. மேலும் அதன் பின் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இயற்றிய எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று கூறவேண்டும்.
இதுகுறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் கூறியிருப்பதாவது :-
நமக்கு ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்றால் ஒன்று அந்த விஷயத்தில் நாம் மூழ்கி முன்னோக்கி செல்லாமல் இருக்கலாம். இல்லையென்றால், அந்த நிகழ்வில் இருந்து நம்மால் என்ன கற்றுக் கொள்ள முடியுமோ? அதை கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம். இரண்டுமே நம் கைகளில் தான் இருக்கிறது. நான் தற்போது இரண்டாவது வாய்ப்பை கையில் எடுத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கக் கூடிய வசனங்கள், கௌதம் வாசுதேவ் மேனனை தாக்கி இருப்பது போல இருப்பதாக கேள்வி கேட்கிறீர்கள்? அதற்கு என்னுடைய பதில், படத்தை படமாக பார்க்க வேண்டும்; அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அந்தப்படத்தின் கதாபாத்திரங்களாக பார்க்க வேண்டும் என்பதுதான், இந்த இடத்தில் இதனை நான் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன் என்றும் அப்பேட்டியில் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கடைசியாக, ” என்னுடைய இரண்டாவது படத்தில் நடந்த பிரச்சினைகள் இப்போதும் என்னை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நான் எத்தனை படங்கள் எடுத்தாலும், அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வியாக இருக்கும் ” என்றும் தெரிவித்து இருக்கிறார்.