கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…
ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் என்ற நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சொகுசு கார் ஒன்றில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உறிவினரின் திருமணவிழாவில் கலந்து கொள்ள இராஜஸ்தானில் இருந்து நாகூர் நோக்கி வந்ததாக கூறப்படுகின்றது.
கார் சென்று கொண்டிருந்த பொழுது பந்தாரி கிராமத்தின் அருகே உள்ள வளைவில் திரும்பியது. அப்பொழுது எதிராக வந்த பேருந்து மீது கார் எதிர்பாராத விதத்தில் மோதியது. கார் பஸ் மீது மோதியதில் காரானது அப்பளம் நொறுங்கியது போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் சொகுசு காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தையும் மற்றொரு நபரும் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் இறந்தவர்கள் ஷாரூக்(24வயது), சதாம்(28வயது), முகமது ஜூபர்(18வயது), முகமது தோகிட்(15வயது), ஆசிப்(30வயது), முகமது(17வயது), முகமது ரஷீத்(24வயது) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.