தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

0
119

 

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

 

திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக இராமநாதபுரத்தில் இருந்து கார் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.

 

மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் அருகில் வரும்பொழுது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் நெடுஞ்சாலையில் உள்ள 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை 20 அடி பள்ளத்தில் இருந்து மீட்டனர். மேலும் மீட்ட மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் குறிந்து எந்த விவரமும் தெரியாத நிலையில் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Previous articleநாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!
Next articleதிருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…