மும்பையில் இருந்து வந்தது தமிழ் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பார்ப்பதற்கு குஷ்புவின் மறு உருவம் போல் தோற்றமளிப்பதால் இவரை அனைவரும் சின்ன குஷ்பூ என அன்போடு அழைத்தனர். தமிழில் ஒரு சில படங்கள் வெற்றி கொடுத்தவர் என்றாலும் இப்பொழுது திருமணத்திற்கு பின்பு சினிமா துறையை விட்டு விலகி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் நுழைந்து வெற்றி படங்களை கொடுக்க தொடங்கிய நிலையில் இயக்குனர் பிரபுதேவா உடன் இணைத்து வைத்து பல விமர்சனங்களை பெற்றதோடு அதன் பின் நடைபெறும் சிம்புவுடன் காதல் என்பது போல பல சர்ச்சைகளும் வெளியாக்கின. இவற்றை அனைத்தையும் முறியடிப்பது போல சமீபத்தில் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த ஓவியராகவும் விளங்கி வருகிறார். அதிக அளவு ஓவியங்களை வரைந்து ஓவிய கண்காட்சிகளில் அவற்றை விற்பனை செய்து அதில் வரக்கூடிய பணத்தை ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி வந்தவர்.
திருமணத்திற்கு முன்னதாகவே கன்னித்தாய் என அழைக்கப்பட்டவர் காரணம் 34 குழந்தைகளை திருமணத்திற்கு முன்பாகவே தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி செலவு உட்பட அனைத்தையும் பார்த்துக் கொண்டவர். சினிமாவில் நடித்த பணத்தை வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தார். இப்பொழுது திருமணம் செய்து கொண்டார் அது மட்டுமல்லாது சினிமாவிலும் இவருக்கான மார்க்கெட் குறைந்துவிட்டது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் தான் தன் தம்பியின் உடைய திருமணத்திற்காக 27 லட்சம் ரூபாய் கடனாக வழங்கியிருக்கிறார்.
அந்தக் கடனை திரும்பி கேட்கும் பொழுது தான் பிரச்சனை துவங்கியுள்ளது. ஹன்சிகாவின் நாத்தனார் முஸ்கான் நான்சி என்பவர் பணத்தை திருப்பி கேட்டவுடன் ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மற்றும் ஹன்சிகாவின் கணவர் என அனைவரும் இணைந்து தனக்கு வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஹன்சிகா இதனை மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். இது குறித்து சினிமா மூத்த பத்திரிகையாளர் தெரிவிக்கும் பொழுது ஹன்சிகாவும் அவரது தாயாரு மிகவும் சாதுவானவர்கள் என்றும் மென்மையான ஒருவர்களால் இது போன்ற கொடுமைகளை செய்ய முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். அனைத்து சொத்துக்களும் ஏழை எளிய குழந்தைகளுக்காக செலவு செய்யப்பட்டு விடுமோ என்ற பயத்தில் ஹன்சிகாவின் நாத்தனார் இது போன்ற ஒரு நாடகமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.