தமிழ் சினிமா திரையுலகில் சத்யராஜ் என்று அழைக்கப்படும் ரங்கராஜ் சுப்பையா நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சத்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து குணச்சித்திர நாயகன், நாயகன் என்று படிப்படியாக இத்துறையில் வளர்ந்து வருகிறார்.
இவர் ஹீரோவாக நடித்த 10 படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறாமல் போயுள்ளன. அச்சமயத்தில் கேரக்டர் ரோலில் ஹீரோவிற்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட கேரக்டர் ரோலுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவேதான் நடிகர் சத்யராஜ் அவர்கள் அதிக அளவில் கேரக்டர் ரோலை தேர்வு செய்து நடித்துள்ளார்.
இதனைப் பற்றி அவர் கூறும்பொழுது, “இதை வெளியில் சொல்ல எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.ரஜினி உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய நண்பர் மணிவண்ணனுடன் இணைந்து 1987 முதல் 1994ம் ஆண்டு வரை அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், இவர்களின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.