சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

Photo of author

By Sakthi

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு..
செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு வைத்து சார்ஜ் ஆன பிறகு செல்போனை எடுத்துவிட்டு பிளக்கில் இருந்த சார்ஜர் வயரை அப்படியே விட்டுவிட்டனர். மேலும் சார்ஜர் சொருகி இருந்த பிளக்கின் இணைப்பை ஃஆப் செய்யாமல் விட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த சார்ஜர் வயரை பிடித்து சானித்யா குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சார்ஜரை வாயில் திணித்து வைத்து விளையாடியது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக குழந்தை சானித்யாவை மின்சராம் தாக்கியது.
இதில் குழந்தை சானித்யா மின்சாரம் தாக்கியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து பெற்றோர் சஞ்சனா மற்றும் சந்தோஷ் குழந்தை சானித்யாவை  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.