2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!

Photo of author

By Sakthi

2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!

Sakthi

2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய நகரம் பற்றிய ஆச்சரியமான தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகளை தற்பொழுது தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட நகரமானது மேற்கு துருக்கியில் அஜினோயில் உள்ளது. ஆம் அஜினோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மேக்கப் சாதனங்களை மக்கள் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்களை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

மேற்கு துருக்கியில் உள்ள ஆகியன நகரத்தில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் சில ஆச்சரியமான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது அந்த ஆராய்ச்சியின் பொழுது நகைகள், வாசனை திரவியங்கள், மேக்கப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த கடையில் இருந்து நெக்லஸ்களும், ஹேர்பின்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தில்லியில் துறை ஆராய்ச்சியில் சிப்பி ஓடுகள், வாசனை திரவியங்கள் பாட்டில்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் ஒப்பனை பொருட்களும், அழகு சாதன பொருட்களையும் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட மேக்கப் எனப்படும் ஒப்பனைப் பொருட்களில் பிக்மெண்ட் எனப்படும் சிவப்பு மற்றும் ரோஸ் நிறங்களில் முகப்பூச்சுகள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த பொருட்களை ரோம காலத்தில் இருந்த பெண்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.