கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

Photo of author

By Pavithra

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

Pavithra

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவசங்கரன் என்னும் பேராசிரியர் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வருவதை கண்டித்ததாகவும் இதனை மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர் சிவசங்கரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கணித பேராசிரியர் சிவசங்கரன் தனது பிரிவு துறை அலுவலகத்தில் இருந்த பொழுது,நான்கு மாணவர்கள் தன்னை தாக்கியதாக,கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவில்பட்டி காவல்துறையினர் அந்த நான்கு மாணவர்கள் மீதும் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் பேராசிரியர் சிவசங்கரன் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது மட்டுமின்றி இரண்டு மாணவர்களை இடைநீக்கமும்,பேராசிரியர் சிவசங்கரனை தற்கால பணியிடை நீக்கமும் கல்லூரி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.