மறைமுகமாக விலை உயர்த்தும் ஆவின் நிறுவனம்!! பச்சை நிறத்தால் ஏற்பட்ட சர்ச்சை!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் குறைந்த விலையில், சத்து நிறைந்த பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில்  புதிய பச்சை நிற பால் பாக்கெட்டினை திருச்சி மண்டலத்தில் அறிமுகம் செய்தது.  கிரீன் மேஜிக்  1 லிட்டர் ரூ.44 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் கிரீன் மேஜிக் பிளஸ் 900  மிலி  ரூ.50 என  ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த இரண்டு பாக்கெட்டுகளில் உள்ள வேறுபாடு ரூ.11 மட்டுமே வேற எந்த வேறுபாடும் இல்லை பாக்கெட்டுகளின் நிறத்தை மட்டும் மாற்றியுள்ளது.  ஆவின் நிர்வாகம் மறைமுகமாக நிறத்தினை மாற்றி பால் விலையினை உயர்த்தி உள்ளது. பால் விலையயை  உயர்த்தவே இப்படி ஒரு யுக்தியை கையாண்டுள்ளது.

இவர்கள் கிரீன் மேஜிக் உடன் சேர்த்து விற்பனை செய்தால், அதை கண்டுகொள்ளாமல் விடலாம் ஆனால் கிரீன் மேஜிக் பிளஸினை வெளியிட்டு கிரீன் மேஜிக் பாக்கெட்டை நிறுத்துவதே அவர்கள் திட்டம், இந்த திட்டமானது மிகவும் கண்டிக்க தக்கது  என பா.ம.கா தலைவர் அன்புமணி ராமதாஸ் , அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.