பிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்கு: திமுக அதிர்ச்சி

0
189

வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பணிபுரியவுள்ள பிரசாந்த் கிஷோர், திடீரென திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுதம் என்பவர், காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது அரசியல் வியூகமான ‘பீகார் கி பாட்’ என்ற கருத்தை பிரசாந்த் கிஷோர் திருடி, ‘பாட் பீகார் கி’ என மாற்றியதாக கூறியுள்ளார். தன்னிடம் பணிபுரிந்த ஒருவரிடம் இருந்து அவர் இந்த ஐடியாவை பெற்றதாகவும், இதனால் பிரசாந்த் கிஷோர் மீது 420, 406 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர், பீகார் இளைஞர்களை ஒன்றிணைக்கு வகையில் ‘பாட் பீகார் கி’ என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். அதுதான் தற்போது பிரச்சனைக்குரியதாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து திருட்டு வழக்கில் பிரசாந்த் கிஷோர் சிக்கியதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது

Previous articleஎனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு.
Next articleபணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!