வேறு ஒருவரின் கதையை ஏற்காத இயக்குனர்!! நான் இப்படித்தான்.. திமிரின் உச்சம்!!

Photo of author

By Gayathri

வேறு ஒருவரின் கதையை ஏற்காத இயக்குனர்!! நான் இப்படித்தான்.. திமிரின் உச்சம்!!

Gayathri

A director who doesn't accept someone else's story!! I am like this.. the height of arrogance!!

பேட் கேர்ள் திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றிமாறன் அவர்கள் தன்னிடம் பணிபுரியக்கூடிய உதவி இயக்குனர்கள் மற்றும் இன்னும் சிலர் தன்னிடம் கதை கூறினார் என்றால் அதனை தான் ஏற்க மறுப்பதற்கான காரணம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேட் கேர்ள் திரைப்பட விழாவில் பேசியதாவது :-

தன்னிடம் யாராவது வந்து கதை கூற வேண்டும் என்றால் அவர்களுக்கு அதிக அளவில் மன தைரியம் இருக்க வேண்டும் என தெரிவித்தவர், மேலும் தன்னிடம் பணிபுரியக்கூடிய உதவி இயக்குனர்கள் சில ஐடியாக்களை கூறும் பொழுது கூட அதனை தான் ஏற்க மறுத்து விடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தான் ஒரு கடுமையான விமர்சகன் என குறிப்பிட்ட வெற்றிமாறன் அவர்கள், தன்னிடம் கதை கூற வருபவர்களுக்கு அதிக மன தைரியம் தேவை என்றும் அவ்வாறு வந்து கதை கூறினாலும் பெரும்பாலும் அந்த கதை நன்றாக இல்லை என்று தான் நான் கூறுவேன் என தெரிவித்தவர், உடனடியாக இந்த கதை நல்லா இல்லை என்று கூறவில்லை என்றாலும் சில நாட்கள் கழித்து சொல்லி விடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.