ஒரு நடிகையை கூட விட்டுவைக்காத இயக்குனர்!! முடியவே முடியாது உதறி தள்ளிய நடிகை!!

Photo of author

By Rupa

 

 

Director Bharathiraja: இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களில் நடிகைகளை அடித்துள்ளார். அது ஏன் எதற்காக அடித்தார் கோபித்துக் கொண்ட நடிகை யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிராமத்து கதையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா ராஜா அவர்கள் தான். 16 வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என பல ஹிட் திரைப்படங்களை எடுத்துள்ளார்.

இவ்வாறு பல ஹிட் திரைப்படங்களை எடுத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமாவில் பல நடிகைகளையும் அறிமுகம் செய்துள்ளார். அந்த வகையில் ராதிகா, ரேகா, ரேவதி, பிரியாமணி, ராதா ஆகியோர் இயக்குநர் பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்த நடிகைகள் தான்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் இவரிடம் அடி வாங்கக் கூடாது என்றும் ஒரு சிலர் இவரிடம் எப்படியாவது அடி வாங்கி விட வேண்டும் அடி வாங்கினால் தமிழ் சினிமாவில் உச்சம் பெறலாம் என்றும் இருந்துள்ளனர். இதில் அடிவாங்கி கோபித்துக் கொண்டு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகையும் இருக்கிறார். கோபித்துக் கொண்ட நடிகை யார், அடி வாங்கக் கூடாது என்று நினைத்த நடிகை யார் என்பது குறித்து பார்க்கலாம்.

கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு காட்சியில் ராதிகா அழுக வேண்டிய கட்டாயம். ஆனால் அவருக்கு அழுகையே வரவில்லை என்று கடுப்பான இயக்குநர் இமயம் நடிகை ராதிகாவை கண்ணத்தில் பளார் என்று அரை விட்டுள்ளார். இதையடுத்து ராதிகா அவர்கள் அழுதுகொண்டே அந்த காட்சியில் நடித்து முடித்து கொடுத்துள்ளார்.

அதே போல 16 வயதினிலே படத்தில் மயிலு  என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்கும் பொழுது காதலன் சத்யஜித் அவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்லும் பொழுது ஸ்ரீதேவி அவர்கள் அழுக வேண்டும். ஆனால் அழுகை வராததால் நடிகை ஸ்ரீதேவியை கண்ணத்தில் அடித்துள்ளார்.

அதே போல மண் வாசனை திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும் பொழுது ஹீரோயினாக நடித்த ரேவதி அவர்கள் அழ வேண்டிய கட்டாயம். அப்பொழுது அவருக்கும் அழுகை வரவில்லை என்பதால் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ரேவதியையும் கண்ணத்தில் அடித்துள்ளார்.

கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிபர் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரேகா. இவர் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கும் பொழுது அழ வேண்டிய கட்டாயம். ஆனால் ரேகா அழாமல் நின்றதால் இயக்குநர் பாரதி ராஜா அவர்கள் ரேகாவை அடித்துள்ளார். இதற்கு கோபித்துக் கொண்ட நடிகை ரேகா அவர்கள் நடிக்க மாட்டேன் என்று கூற பின்னர் அனைவரும் சேர்ந்து ரேகாவை சமாதானம் செய்து நடிக்க வைத்துள்ளனர்.

பருத்தி வீரன் திரைப்படத்தில் நடிப்புத் திறமையை காட்டி நடித்து தேசிய விருது வாங்கிய பிரியாமணி அவர்களையும் தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தான் அறிமுகம் செய்துள்ளார். கண்களால் கைது செய் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியாமணி அவர்கள் பேட்டி ஒன்றில் அந்த திரைப்படத்தில் நடிக்கச் செல்லும் பொழுது படம் முடியும் வரை இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் அடி வாங்காமல் எப்படியாவது படத்தில் நடித்து முடிக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் சென்றும் ஒரு கட்டத்தில் அடிவாங்கியதாக கூறியுள்ளார்.