12 வருட காதலானது திருமணமாக மாறியது. அந்தத் திருமணத்திலிருந்து தற்பொழுது பல்வேறு திரை உலக்கினர் போல தாங்களும் விவாகரத்து பெற்ற பெரிய நினைப்பதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி தகவலை வெளியிட்டனர். இவர்கள் வெளியிட்ட தகவல் அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
பிரியப் போகிறோம் என தெரிவித்த பொழுதும் ஒன்றாகவே இணைந்து இசை கச்சேரிகளில் பணிபுரிவது திரைப்படங்களில் பணிபுரிவது என பல வேலைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் பிரியாமலேயே இருந்து விடமாட்டார்களா என்பது போல ரசிகர்களை ஏக்கம் கொள்ள செய்த இந்த ஜோடி, நீதிமன்றத்தை அணுகி பிரிவதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல் இருந்த நிலையில் நேற்று மார்ச் 24 அன்று நீதிமன்றத்திற்கு சென்ற தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய பின்பு இசையில் பின் தங்கத் தொடங்கினார். தற்பொழுது இசை மட்டுமே என முடிவெடுத்து களம் இறங்கி பல வெற்றி பாடல்களையும் இசைகளையும் ரசிகர்களுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறார். ட்ரெண்டில் உள்ள இசையமைப்பாளர் என்றால் அது ஜீவிதான் என சொல்வதற்கு இணங்க தன்னுடைய இசையால் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட தருணத்தில் தான் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பிரிவதற்காக நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதிலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இருவரும் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்த பின்பு ஒரே காரில் ஒன்றாக வீடு திரும்பியிருக்கின்றனர்
. பொதுவாக விவாகரத்து பெற நினைப்பவர்கள் தங்களுக்கு இடையே இருக்கக்கூடிய மனக்கசப்புகளால் தான் பிரிந்து வாழ நினைப்பார்கள் ஆனால் இவர்களோ என்ன காரணத்திற்காக பிரிந்து வாழ நினைக்கிறார்கள் என்பதே இங்கு குழப்பமாக அமைந்திருக்கிறது. இருவருக்கும் இடையில் நல்ல காதல் இருக்கிறது என்பதை தாண்டி இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளதாகவே இவர்களின் செயல்கள் தோன்ற வைப்பதாக அமைந்திருக்கிறது.