ரெயில் படிக்கட்டில் பிரபல நடிகர் பயணம்! கண்டனம் தெரிவித்த ரெயில்வே நிர்வாகம்! 

0
129

ரெயில் படிக்கட்டில் பிரபல நடிகர் பயணம்! கண்டனம் தெரிவித்த ரெயில்வே நிர்வாகம்!

கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். தமிழ் ஹிந்தி போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். இதனாலயே இவர் எது செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் ஆபத்தான முறையில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற வீடியோவை தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு ரயில்வே நிர்வாகம் சோனு சூட்டை கண்டித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றீர்கள்.

நீங்கள் இவ்வாறு ரயில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது ஆபத்தான ஒன்றாகும். தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். உங்களது ரசிகர்களுக்கும் தவறான தகவலை கொடுக்கும்.எனவே தயவு செய்து இது மாதிரி பயணம் செய்யாதீர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சோனு சூட், முதலில் ரயில்வே நிர்வாகத்திடம் மன்னிப்பை வேண்டுகிறேன். ஏராளமான மக்கள் இவ்வாறு படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். ரயில்வே அமைப்புகளை மேம்படுத்தி உள்ளீர்கள் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!
Next articleஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை….இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது !