திரைத் துறையில் இருந்து விடைபெறும் பிரபல நடிகர்!! சுயசரிதை எழுத இருப்பதாக தகவல்!!

Photo of author

By Gayathri

பிப்ரவரி மாதம் 2022 ஆம் ஆண்டு தலைவர் 169 என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்து சூப்பர் ஸ்டாரின் உடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் விநாயகன் , ரம்யா கிருஷ்ணன் , தமன்னா பாட்டியா , வசந்த் ரவி , மிர்னா மேனன் , யோகி பாபு மற்றும் சுனில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மோகன்லால் , ஷிவா ராஜ்குமார் , ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் விருந்தினர்களாக நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பிஸியாக இருக்கும் நிலையில் அதை முடித்த பின்னர் சில மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் அவர் ஜெயிலர் 2 வில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படமே ரஜினியின் திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக அமையப் போகிறது என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. மேலும், திரைத்துறையை விட்டு விலகிய பின் வாழ்க்கை வரலாற்றினை நடிகர் ரஜினி அவர்கள் எழுத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.