திரைப்பட உலகில் நரை எழுதும் சுயசரிதம், ஜெய் பீம், லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் தனது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் மணிகண்டன். இவர் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தார். பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். திறம்பட இயக்குனராகவும் செயல்பட்டவர்.
தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே நம்மையும் மாற்றி விடுவார். முதலில் சின்னத்துறையில் வாய்ஸ் கொடுத்த இவர் பீட்சா 2( வில்லா) படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். மிகவும் திறமை மிக்கவர்.
இவரைக் குறித்து வலைப்பேச்சு அந்தணன் தற்சமயம் ஒரு ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டதாவது, மணிகண்டன் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் கொடுத்த வெற்றி படத்துக்கு எல்லாம் அவர் டெஸ்லா காரிலே எங்கும் செல்லலாம். ஆனால் அவரோ, ஆடம்பரம் விரும்பாது இன்னும் எளிமையாக பைக்கில் சென்று வருகிறார். இவர் நடித்து வைத்த படங்களை வைத்து கணிக்கையில் பல வெற்றி பட கதாநாயகனாக மாறி உள்ளார். எனினும், ஆடம்பரம் செய்யாமல் அவர் இயல்பாகவே இருக்கிறார் என தெரிவித்திருந்தார் வலைப்பேச்சு அந்தணன்.