அடிமைப்பெண் திரைப்படத்தை பார்க்க தன் தாயிடம் சண்டையிட்ட பிரபல நடிகர்!! கோழியின் முட்டையை விற்று படம் பார்த்ததாக தகவல்!!

Photo of author

By Gayathri

இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தை இயக்கிய நடிகர் மற்றும் இயக்குனரான தம்பிராமையா அவர்கள் முதன் முதலில் “மலபார் போலீஸ்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்.

அவ்வப்போது பாடலாசிரியராகவும் பணியாற்றிய இவர், மனு நீதி (2000), இந்திரலோகத்தில் நா அழகப்பன் (2008) மற்றும் மணியார் குடும்பம் (2018) ஆகிய மூன்று படங்களை இயக்கினார் . அவர் தனது வாழ்க்கையில் ஒரு தேசிய திரைப்பட விருது , இரண்டு SIIMA விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் ஒரு பிலிம்பேர் விருது தென்னக வாழ்க்கையில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் அடிமைப்பெண் திரைப்படத்தை பார்க்க சென்ற பொழுது நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவை பின்வருமாறு :-

தம்பி ராமையா உடைய 11 ஆவது வயதில் வாரம் ஒரு முறை அதாவது வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். ஒரு நாள் அடிமைப்பெண் திரைப்படம் ஆனது திரையரங்குகளில் வெளியாக திரைப்படத்திற்கு செல்ல வேண்டுமென தன் தாயிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரது தாயார் மறுக்கவே, 50 பைசா தருமாறு மீண்டும் மீண்டும் கெஞ்சியுள்ளார்.

ஆனால் அவரது தாயாரோ ஒரு குழந்தையை பெற்றிருந்தால் காசு கொடுப்பது எளிது எனக் கூற , அதற்கு தம்பி ராமையா அவர்கள் உங்களை யார் வீடு முழுவதும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள சொன்னது என எதிர்த்து பேசி இருக்கிறார்.

அதன் பெண் தாயிடம் எதுவும் பேசாமல் கோபமாக வெளியில் வந்த தம்பி ராமையா , அருகிலிருந்த கோழியை நகற்றி விட்டு அதன் அடியில் இருந்த ஐந்து முட்டைகளை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து 50 பைசாவினை பெற்றுக்கொண்டு தன் நண்பர்களுடன் இணைந்து அடிமைப்பெண் திரைப்படத்தை பார்த்ததாக தன் சிறு வயது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.