இப்படி நடிக்க 7 கோடி வாங்கிய பிரபல நடிகை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Photo of author

By Jeevitha

இப்படி நடிக்க 7 கோடி வாங்கிய பிரபல நடிகை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமன்னா இந்தியாத் திரைப்பட நடிகையாக உள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் கல்லூரி என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் தனுஷ், சூர்யா, விஜய், கார்த்திக் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இவர் கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, அயன் , படிக்காதவன், போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.தற்போது அவர் வெப் சீரிஸ் நடித்து வருகிறார். மேலும் இப்போது எல்லாம் அவர் புதிய தோற்றத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

அவர் எப்போதும் போல் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாகவும்  படுக்கையறை காட்சியிலும்  நடித்துள்ளார் .ஏற்கனவே  2016 ஆம் ஆண்டு தமன்னா எந்த சூழ்நிலையிலும்  முத்தமிடக் கூடாது என்ற கொள்கையை அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த  கொள்கைக்கு மாறாக தற்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார். இதனை பார்த்து   ரசிகர்கள்அதிர்ச்சியில் உள்ளார்கள்.  மேலும் பலர் இதனை  இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் தமன்னா  வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

அதனையடுத்து அவர் இதற்கு முன்னாடி ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் 5 கோடி வாங்கி வந்தார். தற்போது ஒரு படத்திற்கு 7 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் வந்துள்ளது. இந்த இரண்டு கோடி அதிக சம்பளம் ஆபாசமாக நடிக்க வாங்குகிறார் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது.