பிரபல உணவகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சிங்கிளாக இருந்தால் பிரியாணி இலவசம்!
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.அண்மை காலமாக உலகில் அனைத்து பகுதிகளிலும் காதலர் தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகம் காதலர் தினம் என்பதினால் சிங்கிளாக இருந்தால் அவர்களுக்கு இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில் காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பவர்கள் சோகத்தில் இருக்க வேண்டாம் உங்களுக்கு இங்கு பிரியாணி இலவசமாக வழங்கும் என அறிவித்துள்ளது.
இந்த முயற்சிக்கான நோக்கம் குறித்து கடை உரிமையாளர் கூறுகையில் சிங்கிளாக இருப்பவர்களுக்கும் ஏதேனும் ஒரு ஆப்ஷன் இருக்க வேண்டும். சிங்கிளாக இருப்பவர்கள் உரிமையாளரை அணுகினால் அவர் அவர்களை பரிசீலித்து அவர்களுக்கு இலவச உணவு வழங்குவார்கள் என கூறினார்.