கணவன் இறந்த பின்பும் மாங்கல்யம், பொட்டு அணியும் பிரபல பாடகி!! இப்படியும் ஒரு நம்பிக்கையா!!

Photo of author

By Gayathri

கணவன் இறந்த பின்பும் மாங்கல்யம், பொட்டு அணியும் பிரபல பாடகி!! இப்படியும் ஒரு நம்பிக்கையா!!

Gayathri

A famous singer who wears a Mangalyam and a pottu even after her husband's death!! Is this even a hope!!

இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி மற்றும் குரல் வல்லமை பெற்றவராக விளங்கக்கூடிய பெண்தான் பாடகி உஷா உதூப். முதலில் இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி தன்னுடைய கணீர் என்ற குரல் வளர்த்தால் தனி ராஜ்ஜியம் நடத்தக்கூடிய பெண்ணாகவே இவர் அனைவராலும் அறியப்படுபவராக விளங்குகிறார்.

பாப் குயின் என கொண்டாடப்படக்கூடிய இவர் முதலில் ஹிந்தி திரை உலகில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தன்னுடைய குரல் வல்லமையை காட்டத் தொடங்கினார். இதற்காக இவர் பத்மபூஷன் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பிரபல பாடகி தன் கணவர் இறந்த பின்பும் மாங்கல்யம் அணிந்து கொள்வது நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது போன்ற மங்களகரமான செயல்களை செய்வது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பிரபல பாடகி உஷா தெரிவித்திருப்பதாவது :-

இந்தியாவில் கணவனை இழந்து விட்டால் அந்தப் பெண் மாங்கல்யம் அணிவதோ, பொட்டு வைத்துக் கொள்வதோ அல்லது பூ வைத்துக் கொள்வதோ செய்வதில்லை. அவர்களை அமங்களி என அழைப்பதோடு இதனைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் இதுதான் கலாச்சாரம் என்றும் பின்பற்றி வருகின்றனர்.

எனக்கு என் கணவரை பற்றி நன்றாகத் தெரியும் என தெரிவித்த அவர் நான் பொட்டு வைக்கவில்லை பூ அணியவில்லை மாங்கல்யம் சுடவில்லை என்றால் தான் என்னுடைய கணவர் ஏன் முட்டாள் மாதிரி செய்து கொண்டிருக்கிறாய் ? எனக் கேட்பார் என்றும் நான் நானாக வாழ்வதே அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதால் அவர் இறந்த பின்பும் நான் இவ்வாறு என்னுடைய வாழ்க்கையை போலியாக இல்லாமல் உண்மையாக வாழ்கிறேன் என தெரிவிக்கிறேன்.

கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக கணவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் இறந்த பின்பும் இவ்வாறு தான் இருப்பதற்கு காரணம் தனக்கு அது மன வலிமையை அதிகம் கொடுக்கிறது என தெரிவிக்கிறார்.