நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

0
220
#image_title

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டில் சிலை அமைத்துக் கோவில் கட்டி உள்ளார். சமந்தா அவர்களின் பிறந்தநாள் அன்று அக்கோவிலயும் திறக்க உள்ளார்.

“பானா காத்தாடி” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதைத் தொடர்ந்து நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தாவுக்கு ரசிகர்கள் அதிகம். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்த  சமந்தா அங்கே கவர்ச்சி தோற்றத்தில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் அஞ்சான் படத்தில் மட்டுமே நடிகை சமந்தா கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இதற்கிடையே, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம்  கடந்த 2017ம் ஆண்டு கோவாவில் நடந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி நடிகை சமந்தாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தனது நடிப்புத் திறமையையும்  நடிகை  சமந்தா நிரூபித்துக் காட்டினார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ…சொல்லுறீயா..மாமா”  என்னும் குத்துப் பாடலில் நடிகை சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் மிகவும் பிரபலமானது. யூட்டுப்பில் கோடிக்கணக்கான ரசிகர்களை அந்த பாடல் சென்றடைந்தது. தமிழ் ரசிகர்களை விட அதிக ஆந்திர மாநில ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சமந்தாவிற்கு தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார்.

நடிகை சமந்தாவின் அதி தீவிர ரசிகரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர். தனது வீட்டில் நடிகை சமந்தாவுக்கு சிலை அமைத்துக் கோவில் கட்டி உள்ளார். நடிகை சமந்தா நாளை (ஏப்ரல் 28) தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு பரிசாக இப்படி ஒரு கோயிலை அவர் கட்டியுள்ளார்.

80களில், 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி நடிகை குஷ்பூ, நடிகை சில்க் ஸ்மிதா உள்ளிட்ட நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Previous article14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!
Next articleகார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது