பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரசிகன்!! வியப்பில் ஆழ்ந்த பாஜக பிரமுகர்கள்!

Photo of author

By Vijay

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரசிகன்!! வியப்பில் ஆழ்ந்த பாஜக பிரமுகர்கள்!

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் நகரைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் நரேந்திர மோடிக்கு தங்கச்சிலை செய்துள்ளார்.ராதிகா சையின்ஸ் நகை தயாரிப்பு நிறுவனம் உரிமையாளர் பசந்த் போஹரா என்ற நபர் இந்த சிலையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகராம் அதனால் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 182 இடங்களில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் 20 கைவினைஞர்கள் கொண்டு 11 லட்சம் மதிப்பில் ஆன தங்கத்தை பயன்படுத்தி மூன்று மாதங்களாக இந்த சிலையை உருவாக்கினேன் என்று கூறினார்.

இந்த சிலையை வாங்க பல பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அதை நான் விற்பனைக்கு செய்யவில்லை நரேந்திர மோடியின் மேல் உள்ள அதிக பிரியத்தினால் செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்