ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு! 

0
169

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு!  

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டம் ஜொரப்ஹடக் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். இவர் தனது பெற்றோர் மனைவி மகளுடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில் சுவாதிக்கும் பெங்களூரைச் சார்ந்த கௌரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணம் அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டபத்தில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

மகளின் திருமணத்திற்காக சுபாத்லால் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். மணமகள் சுவாதிக்கு சடங்குகள் நிறைய செய்ய வேண்டி இருந்ததால் அவர் தனது தோழிகளுடன் 4 மணிக்கே மண்டபத்திற்கு சென்று விட்டார்.

அப்போது மாலை 6 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. 2 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பரவி 3- வது, மற்றும் 4-வது தளத்திற்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சுபாத் லால் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கிக் கொண்டனர். அவர் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் சுபாத் லாலின் மனைவி பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சுபாத் லாலின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து அந்த தீ விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடும்பத்தில் தனது தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்த விவரம் தெரியாத சுவாதி மணமேடை ஏறினார். ஆனால் சுவாதியின் உறவினர்களுக்கு சம்பவம் தெரிய வரவே அவர்கள் திருமணம் முடியும் வரை சுவாதிக்கு தெரிய வேண்டாம் என மறைத்துள்ளனர். தீயில் தனது மனைவி பெற்றோர் உயிரிழந்ததை நேரில் கண்ட சுபாத்லால் மனமுடைந்து தனது மகளின் திருமணத்தையாவது நேரில் காண வேண்டும் என்ற கனத்த இதயத்துடன் திருமண மண்டபம் வந்துள்ளார்.

திருமண சடங்குகளை உறவினர்கள் மேற்கொள்ள சுவாதி தனது குடும்ப உறுப்பினர்களை பற்றி கேட்டதற்கு உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் சுவாதியின் திருமணம் முடிந்ததும் விபத்தில் அவரது தாய் தாத்தா பாட்டி இறந்த விவரத்தை கூறியதும் அவர் பேரதிர்ச்சி அடைந்தார்.

மகளின் திருமணம் தடைபடக்கூடாது என்று எண்ணி தனது மனைவி பெற்றோர் மறைந்ததை கூட மறைத்த சுபாத் லாலின் நிலை மனதை உருக்கும் நிலையில் இருந்தது. திருமணம் முடிந்த கையோடு தனது குடும்ப உறுப்பினர்கள் இறந்த செய்தியை கேட்ட சுவாதி கதறி அழுதது அனைவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleபெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! 
Next articleசர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்!