தவெக மாநாடு முடிந்த சில நாட்களில் தலைவர் விஜய் எடுத்த முடிவு!! தேர்தல் பணியில் ஈடுபடவில்லையா என மக்கள் கேள்வி!!

Photo of author

By Gayathri

தமிழக வெற்றிக் கழக மாநாடு சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதியதொரு மாற்றத்தை உருவாக்கப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அவர் தற்பொழுது தனது படத்தில் பிசியாக உள்ளார் என்ற தகவல் வெளியாக்கியுள்ளது.

மேலும் இவர் நடை பயணம் மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்தப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது இவர் தனது விஜய் 69 படத்தில் பிசியாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொண்டர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்குவதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், தனது கவனம் முழுவதையும் தனது கட்சிக்காகவும், கட்சி சம்பந்தப்பட்ட பேட்டிகள், போராட்டங்கள் என்று இருந்தால் மட்டுமே தமிழக வெற்றிக் கழக தலைவரால் ஆட்சியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் அரசியலில் நிலைக்க முடியாது என்றும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முடிந்தவுடன் இக்கழகத் தலைவர் விஜய் அவர்கள் வருகை புரிந்த அனைத்து மக்களுக்கும் மேலும் வீட்டிலிருந்து அவருடைய மாநாட்டை கண்டு களித்த மக்களுக்கும் நன்றி கடிதம் ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்றும் கூறலாம். அரசியலில் கடிதம் என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.