Breaking News, World

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் வெடித்ததில் பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!

Photo of author

By Rupa

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது  விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ரேடியோ டவரில் மோதி ஒரு நொடியில் வெடித்து சிதறியது.இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் மக்கள் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சிகளை தன் கண் முன்னாடியே பார்த்து பயந்து உள்ளார்கள். அந்த ஹெலிகாப்டர் ரேடியோ டவரில் மோதிய வேகத்தில் உராய்வின் காரணமாக வெடித்து தீப்பற்றி  எரிந்ததில் பயணம் செய்த பயணிகள் உயிரிழந்துள்ளார்கள் என அமெரிக்காவின் ஹூஸ்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 4பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் ஒரு குழந்தை உள்பட மொத்தம் நான்கு பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். தற்பொழுது இது போன்று நிறைய சம்பவங்கள் நிகழ்வதை  எண்ணி மேலும் மக்கள் பயத்தில் உள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய உறுப்பினர்!! பரபரப்பு தகவல்!!

இந்தியா உதவியுடன் மாலத்தீவில் கொண்டுவரப்படும் புதிய வசதி!!