இனி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் ரூ 10,000 அபராதம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி நடவடிக்கை!
தற்பொழுது நாம் உபயோகிக்கும் அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் அடுத்த முறை பணம் போடும் போது அபராதமாக சில ரூபாய்களை வங்கி நிர்வாகம் பிடித்துக் கொள்கின்றனர்.அதேபோல ஏடிஎம் மெஷின்-களில் பணம் இல்லை என்றால் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.வேறு ஒரு ஏடிஎம் இயந்திரத்தை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்தில் பத்து மணி நேரத்திற்கும் மேல் பணம் ஏடிஎம் மெஷின்களில் போடப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு பணம் நிரப்பப்படவில்லை என்றால் அந்த ஏடிஎம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர்.
அந்தவகையில் இனி அனைத்து இடங்களிலும் அக்டோபர் மாதம் முதல் நாளில் இருந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக எந்தெந்த இடங்களில் உள்ள ஏதிஎம்-களில் பணம் நிரப்பப்படாமல் இருக்கிறதோ அந்த வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு செய்வதால் பணம் இல்லாமல் ஏடிஎம் மையங்கள் செயல்படும் நேரமும் மற்றும் மக்கள் பணம் இல்லாமல் வேறொரு ஏடிஎம் தேடிச் செல்லும் அலைச்சலையும் தடுக்க இயலும். இந்தத் திட்டத்தினால் பொதுமக்கள் மிகவும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி வங்கிகள் மக்களுக்கு சேவையை செய்யாமல் பொறுப்பற்று இருக்கிறது.மக்கள் உபயோகம் படுத்தும் வகையில் அவர்களுது வேலையை செய்து முடிக்க வேண்டும்.அபராதம் என்ற அறிவிப்பு வெளியிடுபடுவதினால் அவர்களின் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பர்.அதுமட்டுமின்றி சில வங்கிகளில் பொதுமக்கள் பல பிரச்சனைகளை கூறி வரும் போது அவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் உதசனம் செய்துவிடுகின்றனர்.இல்லையென்றால் அங்கும் இங்குமாக அலைய விடுகின்றனர்.இவ்வாறு செய்பவர்களுக்கும் பாடம் புகட்டும் படி தண்டனைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்க வேண்டும் என மக்கள் இன்றளவும் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.