இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Rupa

இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுவரை குறைந்தபாடில்லை. மக்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. அவர் மக்கள் வாழ பழகிக் கொண்டால் தொற்று மக்களை விடுவதாக இல்லை.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி வருகிறது.

அந்த வகையில் இம்முறை டெல்டா ,டெல்பிளஸ் வகையான தொற்றுகள் உருவாகி முடிந்து நிலையில் மீண்டும் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று முந்தைய தொற்றுக்களை காட்டிலும் அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டது. ஒரு நாளின் இத்தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஒருசில மக்கள் அரசின் நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் நடந்து கொள்கின்றனர்.

அவ்வாறான மக்களை விதிமுறைகளை கடைப்பிடிக்க செய்ய தமிழக அரசு அபராதம் விதிக்கும்படி ஆணையிட்டது. அந்த வகையில் முதலில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ 50 மட்டும் அபராதம் பெறப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த பண்டிகை காலங்களில் அதிகப்படியானோர் முக கவசம் இன்றியே வெளியே சுற்றுகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இனி மக்கள் வெளியே வரும்பொழுது முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.எனவே வரும் நாட்களில் மக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் தனிமனித இடைவெளி கடைபிடித்து நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அரசு விதிக்கும் அபராதத்தை கட்டும்படி நிலைமை வந்துவிடும்.