தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

0
296
A fire accident in a private bank! Sensational incident!
A fire accident in a private bank! Sensational incident!

தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்டுசாலை பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.அதனை அறிந்த வங்கி காவலாளி உழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.மேலும் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.இந்த தீ விபத்து குறித்து ராணிபேட்டை போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு யாரவது காரணமா அல்ல எதிர்பாராதவிதமாக ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து வங்கியின் மேல்மாடியில் ஏற்பட்டுள்ளதால் வங்கிக்கு எந்த வீத சேதாரமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இத்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!
Next articleவானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!