ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!!
ஈராக் நாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஈராக் நாட்டில் அல்ஹம்டனியா என்ற மாவட்டத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
திருமண நிகழ்வில் மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 150 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் பத்திரிக்கை நிறுவனமான ஐ.என்.ஏ தகவல் வெளியிட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது. தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாசு வெடித்தது தான் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.