மசாலா உதிராத.. தள்ளுவண்டி கடை மீன் ப்ரை ரெசிபி உங்களுக்காக!!

Photo of author

By Divya

மசாலா உதிராத.. தள்ளுவண்டி கடை மீன் ப்ரை ரெசிபி உங்களுக்காக!!

Divya

அசைவ பிரியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மீன்தான்.நீங்கள் எந்த மீன் வாங்கினாலும் இங்கு சொல்லப்பட்டுள்ள செய்முறைபடி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மீன் – ஒரு கிலோ
2)பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
3)வெங்காய பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
4)மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
6)மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
7)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
8)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
9)உப்பு – தேவையான அளவு
10)கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்துவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த வெங்காயம் மற்றும் பூண்டு பேஸ்டை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி மிளகுத் தூளை அதில் போட்டு கலக்க வேண்டும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி கடலை மாவு,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள் ஆகியற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு எலுமிச்சை சாறை அதில் பிழிந்து நன்றாக கலக்க வேண்டும்.இந்த பேஸ்டை மீன் துண்டுகள் மீது தடவி சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.

இந்த மீனை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.எண்ணெய் நன்றாக சூடானதும் மசாலாவில் ஊறவைத்த மீனை போட்டு பொரிக்க வேண்டும்.

மீன் நன்றாக பொரிந்து வந்த பிறகு அதனை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இது போன்று மீன் பொரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இப்படி மசாலா தயாரித்து மீன் பொரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.