தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இருந்தால் போதும்!! சுங்கச்சாவடிகளில் அனுமதி இலவசம்!!

0
130
A flag of Tamil Nadu Vetri Kazhagam is enough!! Entry at toll booths is free!!
A flag of Tamil Nadu Vetri Kazhagam is enough!! Entry at toll booths is free!!
  1. இன்று மாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் மாநில அளவிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது.

இதற்காக பல மாவட்டங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள், ரசிகர்கள், ரசிகைகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் வரும் வழியில் உள்ள சுங்க சாவடிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இடம் பெற்று இருந்தால் அவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த மாநாட்டிற்காக வரும் வாகனங்கள் அனைத்தையும் சுங்க சாவடிகளில் தனி வழியில் எந்த ஒரு போக்குவரத்து இடையூறும் இன்றி சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுப்பி வைக்கின்றனர்.

விக்கிரவாண்டியில் உள்ள சுங்க சாவடிகள் மட்டும் இன்றி, சென்னையில் இருந்து வருபவர்களுக்கும், திருச்சி ஹைவேஸில் இருந்து வருபவர்களுக்கும் என மாநாட்டிற்கு வரும் வழியில் உள்ள மூன்று சுங்க சாவடிகளில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு பெரும் எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் வரும் அனைத்து பொது மக்களுக்கும் தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வருகின்றனர். அந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் வருபவர்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்பதை அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆட்களை என்ன கியூ ஆர் ஸ்கேன்!! அதிரடி முடிவெடுத்த தமிழக வெற்றி கழகம்!!
Next articleதவெக மாநாட்டில் கழிவறை இடத்தில குடிநீர்.. ஏதும் சரியில்லை!! தொண்டர்கள் கடும் அதிருப்த்தி!!