சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

0
37
#image_title

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!!

தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கு வந்த முன்னாள் மாணவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

தர்மபுரி மாவட்டத்தில் அமானி மால்லபுரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வழியில் கல்வி பயின்ற சான்றிதழ் தேவைப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்கு அதே பகுதியில் இருக்கும் அமானி மால்லபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்று சான்றிதழ் வாங்குவதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் அவர்களை அணுகியுள்ளார்.

அப்பொழுது சான்றிதழ் வாங்க வந்த முன்னாள் மாணவர் கார்த்திக் அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் அவர்கள் உங்களுக்கு சான்றிதழ் வேண்டும் என்றால் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன் பிறகு தலைமை ஆசிரியர் சசிகுமார் அவர்கள் நோட்டுகள், பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் நீங்கள் 300 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார்.

பின்னர் தலைமை ஆசிரியர் சசிகுமார் 300 ரூபாய் பணத்தை பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார். அதன் பிறகு முன்னாள் மாணவர் கார்த்திக் தலைமை ஆசிரியர் சசிகுமார் அவர்கள் கூறியது போலவே 300 ரூபாயை பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு தமிழ் வழி கல்வி சான்றிதழ் பெற்று சென்றார்.

முன்னாள் மாணவர் கார்த்திக் அவர்கள் ஏற்கனவே பணம் கொடுக்கும் பொழுது வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அது மட்டுமில்லாமல் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் அவர்கள் இது போலவே சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்கள் வாங்க வருபவர்களிடம் முன்பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட கல்வித் துறையும், தமிழக அரசும் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் அவர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் மாணவர் கார்த்திக் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.