திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

0
155
A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?
A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

திருப்பதி ஆந்திர மாநிலம் அருகே கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின் பகுதியில் இருந்த புகை மூட்டத்துடன் தீப்பொறி கிளம்பியது.இதை அறிந்த லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் லாரியில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

தீ முழுவதும் பற்றி லாரியில் இருந்த கேஸ் எரிய தொடங்கிவிட்டது. எரிந்து கொண்டிருந்த கேஸ் திடீரென்று வெடித்து சிதறியது. இதனால் அங்காங்கே கேஸ் வானில் பறக்க ஆரம்பித்தது. இதனால் அந்த சாலையில் வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிரண்டு போய் அங்காங்கே வாகனங்களை நிறுத்தினர்.உடனே அருகில் இருந்தவர்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் நெருங்கவே முடியாத அளவிற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. தட்டுத்தடுமாறி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தால் அப்பகுதி முழுக்க புகை மூட்டமாக காட்சி அளித்தது.

author avatar
Parthipan K