தமிழகத்தில் அக்டோபர் மாதம் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் வானிலை மையத்தினால் மழை தொடர்பான பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பரவலாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் நாளை மறுநாள் டானா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசக்கூடும் என்றும், இப் புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அதற்கு இடையில் கற்று வேகமானது 120 கிலோ மீட்டர் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இன்று காலை மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி. 48 மணி நேரத்தில் புயலாக மாறும், மேலும் இப்புயல் அக்டோபர் 24-இம் தேதி மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும்.
குறிப்பாக ஒடிசா மாநிலம் புரி பகுதில் “டானா புயல்” கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப் புயலானது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு புயல் பாதிப்பு எதுவும் இருக்காது, என வானிலை மையம் தெரிவித்துள்ளது.