காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!

0
219

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!

மயிலாடுதுறையில் தான் காதலித்த பெண்ணை பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பலை கொண்டு கடத்திய காதலன்!

மயிலாடுதுறை கஞ்சமேட்டுத் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.இவர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் மயிலம்மன் நகரில் பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை விக்னேஸ்வரன் காதலித்து வந்துள்ளார்.பின்பு இவரின் நடவடிக்கை பிடிக்காமல் அப்பெண் விக்னேஸ்வரனை விட்டு விலகியுள்ளார்.இதன் காரணமாக விக்னேஸ்வரன் அப்பெண்ணிடம் தகராறியில் ஈடுபட்டுள்ளார்.இதனைக் குறித்து அந்தப் பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் இருதரப்பினரையும் விசாரித்த காவல்துறையினர், விக்னேஸ்வரனை அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி விக்னேஸ்வரன் அந்த இளம் பெண்ணை கடத்த
முயன்றுள்ளார்.பிறகு பெண் வீட்டார் இது குறித்து மீண்டும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.இதனால் தலைமறைவான விக்னேஸ்வரனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு 15-ற்க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட கும்பலுடனும் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன்
அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கடத்தியுள்ளனர்.

இதனைக் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில்,
காவல்துறையினர் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையத்தையும் அலர்ட் செய்துள்ளனர்.மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு பெண் கடத்திய வாகனத்தை காவல்துறையினர் பின் தொடர்ந்தனர்.இந்த கடத்தல் வண்டியை காவல்துறையினர் விக்கிரவாண்டி அருகே பிடித்தனர்.பிறகு கடத்தப்பட்ட இளம் பெண்ணை காப்பாற்றியதோடு காரில் இருந்த விக்னேஸ்வரனையும் அவனது கூட்டாளிகளையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழகம் மற்றும் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!
Next articleஇளம் பெண்ணை வீடு புகுந்து கடத்திய கும்பல்! அதிரடியாக களமிறங்கி மீட்ட காவல்துறையினர்!